Fr. Sarathjeevan

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் மக்களுக்காக தன்னுயிர் ஈந்த அருட்தந்தை சறத்ஜீவனின் நினைவாக அருட்தந்தை சறத்ஜீவன் நிதித்திட்டம் 2013ம் ஆண்டு அவரது குடும்பஅங்கத்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

Sara

சரத்ஜீவன் தரிசனம் முன்பள்ளி திறப்புவிழா
புங்குடுதீவு: 11 பெப்ருவரி 2017


புங்குடுதீவில் புனித சவேரியார் ஆலயத்தில் அமைந்துள்ள சறத்ஜீவன் தரிசனம் முன்பள்ளி 11.02.2017 அன்று மேன்மை தங்கிய ஆயா் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவா்களினால் ஆசீா்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இதற்கான ஏழு மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி உதவியினை திரு. அஜித்ஜோண்பிள்ளை இயக்குனுராக உள்ள “சண் பீம் பவுண்டேசன்“ நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் சறத்ஜீவன் தரிசனம் முன்பள்ளி மாணவா்களுக்கான சத்துணவு. மற்றும் கல்விக்கான உதவிகளையும் இந்நிறுவனம் பொறுப்பெடுத்துள்ளது.

புங்குடுதீவில் அமைந்துள்ள சரத்ஜீவன் தரிசனம் முன்பள்ளிக்கான நிரத்தர கட்டிடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா 09-07-2016 அன்று கியுடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை இயுஜின் பிரான்சிஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது. கொழும்பு Brandix Company இயக்குனர் அஜித் ஜோண்பிள்ளை அவர்களின் “சண்பீம் பவுண்டெசன்“ நிறுவனத்தினால் நிரந்தர கட்டிடத்திற்கான நிதியுதவி வழங்கப்படுகின்றது. இறுதி யுத்தத்தில் மரணித்த அருட்தந்தை சரத்ஜீவன் நினைவாக 2010ம் ஆண்டு புங்குடு தீவில் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது, 28 முன்பள்ளி மாணவர்கள் கல்விகற்கின்றார்கள்.

முள்ளந்தண்டு பாதிப்புற்றவருக்கு உதவி
வவுனியா: 04 ஜனவரி 2017


வவுனியா குமாங்குளத்தில் அமைந்துள்ள ‘சேவ் அக்ற் கோம்’(Save Act Home) என்ற இல்லத்தில் வாழும் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்ற சகோதரர்களுக்கான மருத்துவப் பொருட்களும்; இதே இல்லத்திலும் ‘அமதிக்கரங்கள்’ நிறுவனத்திலும் (Lebara Wellness Centre) தந்தையரை இழந்தவர்களினதும் இயலாமையுடன் கூடிய நபர்களினதுமான சுமார் 50 பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்களும் ‘பாதர் சறத் ஜீவன் பவுண்டேசன்’இன்(Fr.Sarathjeevan Foundation) அனுசரணையில் வழங்கப்பட்டன. அத்துடன் படுக்கையில் இருக்கும் 6 முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்ற சகோதரர்களுக்கான ஏயார் மற்றஸ் (Air Matress) என்பனவும் வழங்பப்படவுள்ளது. இதற்கான ரூபா. 225,000 நிதிபங்களிப்பினை திரு. ஞானப்பிரகாசம் அவர்களும் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் கிறிஸ்தோப்பர் குடும்பத்தினரும் கனடா வாழ் கத்தோலிக்க கரஸ்மெற்றிக் உறுப்பினர்களும் வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள். மேலும் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்ற 25 சகோதர்கள் “சேவ் அக்ற்” இல்லத்திற்கு வரஇருந்தாலும் நிதிபற்றாக்குறை காரணமாக அவர்களை இணைத்துக்கொள்ள முடியாதிருப்பதாக அதன் பொறுப்பாளர் ஜெகதீசன்தெரிவித்தார். (தகவல் நித்திலா)

சுயதொழிலுக்கான உதவி
கிளிநொச்சி: 9 செப்டம்பர் 2016


திருக்குடும்ப கன்னியர்களின் வழிநடத்துதலுடன் கிளிநொச்சியில் உள்ள செல்வபுரத்தில் நடாத்தப்படும் பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கான சுயதொழிலுக்கான உதவி அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் செப்டம்பர் 9, 2015 அன்று கொடுக்கப்பட்டது. இதற்கான நிதி உதவியை புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் திரு. வடிவேல் அவர்களும் திரு.புஷ்பராஜா அவர்களும் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள்.

Amathi Karangal

அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் கல்வி உதவி
யாழ்ப்பாணம்: 9 செப்டம்பர் 2016

புனித சார்ள்ஸ் மகாவித்தியாலயத்தில் கல்விபயிலும் போரினால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு மாதாந்தம் Rs.1000 ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப நிகழ்வு 19-09-2016 அன்று பாடசாலை அதிபர் திருமதி கிறிஸ்ரபெல் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் இயக்குனர் அருட்தந்தை கி.ஜோ.ஜெயக்குமார் அவர்கள் மாணவர்களுக்கான உதவிதொகையை வழங்கினார். அவர் தமது உரையில் மாணவர்கள் ஊக்கமுடன் கல்விகற்க வேண்டும் என வலியுறுத்தினார். உதவிபெறும் மாணவர்களும் அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் செயலாளர் செல்வி நித்திலா மரியாம்பிள்ளை, ஆசிரியர் கமில்டன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர். இதற்கான நிதி உதவிகளை லண்டனில் வசிக்கும் திரு. வடிவேல் அவர்கள் வழங்கியுள்ளார். அவரிற்கு எமது நன்றிகள்.

மேலும், வன்னியில் உள்ள 23 மாணவர்களுக்கும், யாழ்.உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்தை சேர்ந்த 14 மாணவர்களுக்கும் மாதாந்தம் Rs.1000 கல்விக்கான உதவியாக வழங்கப்படுகின்றது. மொத்தமாக 52 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றது. இதற்கான நிதிஉதவிகளை இலங்கையிலும் வெளிநாட்டிலும் வாழும் தமிழ்மக்கள் கொடுத்து உதவுகிறார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து பல நல்ல உள்ளம் படைத்தவர்களினால் மேலும் நிதிஉதவி கிடைக்கப்பெற்றதன் காரணமாக இருபத்தி மூன்று மாணவர்களுக்கு மாதாந்தம் கல்விக்கான நிதி வழங்கப்பட்டுவருகின்றது. வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட போரினால் பாதிக்கப்பட்ட அதேநேரம் கல்வியில் ஊக்கமுள்ள மாணவர்களுக்கு இவ் உதவிகள் வழங்கப்படுகின்றது. உருத்திரபுரம், இரணைப்பாலை, குமுளமுனை மற்றும் முல்லைத்தீவு பங்குகளை சேர்ந்த 23 மாணவர்கள் பயனடைகின்றார்கள். மேலும் யுத்ததின்போது காயமடைந்து மாற்றுத்திறனாளிகளாக உள்ளவர்களுக்கும் உதவிகள் வழங்கப்படுகின்றது.


2014ம் ஆண்டு ஆனிமாதம் 10ம் திகதி முன்னாள் யாழ் ஆயர் மதிப்பிற்குரிய தோமஸ் சவந்தரநாயகம் ஆண்டகை மற்றும் யாழ் ஆயர் மதிப்பிற்குரிய ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் அனுமதியுடன் அருட்தந்தை கி.ஜோ. ஜெயக்குமார் அடிகளாரை இயக்குனராக கொண்டு "அருட்தந்தை சறத்ஜீவன் நிதித்திட்டம்" உத்தியோகபூர்வமாக இயங்கதொடங்கியது. அருட்தந்தை ரவிராஜ் பொருளாளராகவும், நித்திலா அம்மையாரை செயலாளராகவும், அருட்தந்தை கிருபாகரன், நிக்கொலின் சாமிநாதர் அம்மையார் ஆகியோரை அங்கத்தவராகவும் கொண்ட ஐந்துபேர் உள்ள நிர்வாக அமைப்பால் இந்நிதித்திட்டம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

அருட்தந்தை சறத்ஜீவன் நிதித்திட்டத்திற்கு உதவிவழங்கும் அனைவரிற்கும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவும் அருட்தந்தையர்களுக்கும் நிர்வாகசபை அங்கத்தவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கின்றோம்

மாற்றுவலுவுள்ளவருக்கு மலகூடவசதிகள்
கிளிநொச்சி: 9 செப்டம்பர் 2016


அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் வன்னி யுத்ததினால் பாதிக்கப்பட்ட மாற்றுவலுவுள்ள ஆறு பேர்களுக்கு அவர்களின் பாவனைக்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்ட மலகூடவசதிகள் எற்படுத்தி கொடுப்பதற்கான நிதிஉதவிகள் அமதிக்கரங்கள் இயக்குனர் அருட்தந்தை அன்புராச அமதி அவர்களிடம், அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் இயக்குனர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களினால் செப்டம்பர் 9, 2015 அன்று வழங்கப்பட்டது. மேலும் மாற்றுவலுவுள்ள நான்கு பேர்களுக்கு சுயதொழில் ஆரம்பிப்பதற்கான நிதியுதவியும் கொடுக்கப்பட்டது.

மனிதத்தைப் புனிதப்படுத்துவோம்
வவுனியா: 19 நவம்பர் 2016


வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்தவ கருத்தாடல் நிகழ்வு 19.11.2016அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் `மனிதத்தைப் புனிதப்படுத்துவோம்` என்ற தொனிப்பொருளில் உரையாற்ற நமக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. (Fr. Anpurasa)

அரங்கம் 2 ல் அருட்தந்தை சறத்ஜைீவன் அடிகளாரின் உருவப்படம் கொண்டுவரப்பட்ட அரங்கநிகழ்வுகள் நடைபெற்றன. அருட்தந்தை சறத்ஜைீவன் பற்றிய வாழ்க்கை சுருக்கமும் வழங்கப்பட்டது. அவரது உருவப்படம் தேசிய கல்வியற் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளது.


Contact by post:

Fr. Sarathjeevan Foundation
P.O. Box 2,
Bishop's House,
Jaffna,
Sri Lanka