Fr. Sarathjeevan

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் மக்களுக்காக தன்னுயிர் ஈந்த அருட்தந்தை சறத்ஜீவனின் நினைவாக அருட்தந்தை சறத்ஜீவன் நிதித்திட்டம் 2013ம் ஆண்டு அவரது குடும்பஅங்கத்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையிலும், புலம் பெயர்ந்து உள்ள நாடுகளிலும் வாழும் நல்ல உள்ளம் படைத்தவர்களின் உதவியுடன் அருட்தந்தை சறத்ஜீவன் நிதித்திட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறது.

Sara

அருட்தந்தை சரதஜீவன் தரிசனம் முன்பள்ளியின் வளைவு புனரமைப்பு
யாழ்ப்பாணம், 30-01-2023

PreSchool

அருட்தந்தை சரதஜீவன் தரிசனம் முன்பள்ளியின் வளைவு புனரமைப்பு செய்ய்ப்ட்டது. அருட்திரு எட்வின் நரேஷ் அடிகளார் இதனை முன்னெடுத்தார். மொன்றியலை சேர்ந்த நன்கொடையாளர் இதற்கான நிதிஉதவி ரூபா.52.000 வை வழங்கியுள்ளார்.

வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் விநியோகம்
யாழ்ப்பாணம், 30-12-2022

DryFood

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் கிறிஸ்மஸ் காலத்தில் வழங்கப்பட்டது.

ரூபா.292, 480.00 பெறுமதியான அரிசி. மா, சீனி. பருப்பு. தேயிலை, பிஸ்கட். நெஸ்ரமோல்ட் ஆகிய பொருட்கள் அடங்கிய உணவுப் பொதிகள் வறிய குடும்பங்களிற்கு மார்கழி மாதம் 2022ல் வழங்கப்பட்டன. யாழ்ப்பாணம். இளவாலை, அளம்பில். பிரமானந்தனாறு ஆகிய இடங்களில் வசிக்கும் 56 வறியகுடும்பங்கள் ஒவ்வொன்றும் ரூபா.5000.00 பெறுமதியான உலர்உணவுப்பொதிகளை பெற்றுக்கொண்டார்கள். இவற்றை அருட்திரு கி.ஜோ.ஜெயக்குமார். அருட்திரு யுட் அமலாதாஸ். செல்வி நித்திலா மரியாம்பிள்ளை ஆகியோர் வழங்கிவைத்தார்கள்.

பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் விநியோகம்
மன்னார், 04-01-2023


மன்னார் மாவட்டத்தின் மடு வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் 04-01-2023 அன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.

தட்சணாமருதமடு பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகளை அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் இயக்குனர் அருட்தந்தை கி.ஜோ. ஜெயக்குமார் அடிகளார் மாணவர்களுக்கு வழங்கினார். அத்துடன் மடுபிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்காக ஒரு தொகுதி அப்பியாசக் கொப்பிகள் மருதமடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளாரிடம் கையளிக்கப்பட்டது. மேலும் உயிலங்குளம் மற்றும் இலுப்பைக்கடவை பாடசாலைகளுக்கும் ஒருதொகுதி அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டன. 337,358.75 ரூபா பெறுமதியான அப்பியாசக்கொப்பிகள் பொருளாதார நெருக்டியினால் பாதிக்கப்பட்ட வறியகுடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்காக அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மறைந்த அருட்தந்தை சறத்ஜீவனின் சகோதிரிகளான அருட்சகோதரி மரினா (தி.சி). செல்வி நித்திலா மரியாம்பிள்ளை, செயலாளர் அருட்தந்தை சறத்ஜீவன் நிதியம் ஆகியோரும் பங்குபற்றினர்.

திரு.கிறிஸ்ரி அருள், ஊறணி நிதியம் பிரான்ஸ் மற்றும் திரு. அன்ரன் தருமலிங்கம். கனடா ஆகியோர் இதற்கான நிதிஉதவிகளை வழங்கினார்கள். அவர்களுக்கு அருட்தந்தை சறத்ஜீவன் நிதியம் தனது நன்றிகளை தெரிவிக்கின்றது.

சறத்ஜீவன் தரிசனம் மழலைகள் முன்பள்ளி புங்குடுதீவு
புங்குடுதீவு, 2022


சறத்ஜீவன் தரிசனம் மழலைகள் முன்பள்ளி புங்குடுதீவு புனித பிரான்சிஸ்கு சவேரியார் ஆலயப்பங்கில் அமைந்துள்ளது. இது வன்னியுத்தத்தின் இறுதிநாளில் மக்களுக்காக வாழ்ந்து தன்னுயிர் ஈந்த அருட்தந்தை சறத்ஜீவன் அடிகளார் நினைவாக அமைக்கப்பட்டது. இந்த முன்பள்ளியை சண்பீம் பவுண்டேசன் அமைப்பினர் 2017ம் ஆண்டு அமைத்தனர். முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு. மாணவர்களுக்கான தினசரி சத்துணவு மற்றும் கல்வி உபகரணங்கள் என்பவை அனைத்தும் சண்பீம் பவுண்டேசன் அமைப்பினால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு எமது நன்றிகள். கியுடெக்-கரித்தாஸ் யாழ்ப்பாணம் இக்கட்டட வேலைகளை பொறுப்பெடுத்து நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது. 24 நொவம்பர் 2021 அன்று கியுடெக்-கரித்தாஸ் யாழ்ப்பாணம் பணியாளர்களுடன் சறத்ஜீவன் தரிசனம் மழலைகள் முன்பள்ளியை தரிசித்தபோது எடு க்கப்பட்ட படங்கள் சில பதிவிடப்பட்டுள்ளன.

கொவிட்19 தொற்று கால உதவிகள்
இளவாலை, ஆகஸ்ட் 2021


அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் வறிய குடும்பங்களுக்கு ரூபா.200,000.00 பெறுமதியான உலர்உணவுப்பொருட்கள் ஆவணி. புரட்டாதி மாதங்களில் வழங்கப்பட்டன. உலர்உணவுப் பொதிகள் இளவாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்ளில் உள்ள குடும்பங்களிற்கு அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் இயக்குனர் அருட்தந்தை கி. ஜோ.ஜெயக்குமார். அருட்தந்தையர்கள் கிறிஸ்ரோபர். நேசராஜா அடிகளார் அவர்களால் வழங்கப்பட்டன. இதற்கான நிதியுதவியை பிரான்சில் வசிக்கும் திரு. கிறிஸ்ரிஅருள் (ஊறணி பவுண்டேசன்) அவர்கள் வழங்கியுள்ளார்.

வறிய குடும்பத்திற்கான குழாய்கிணறு
கொல்லங்கலட்டி, ஆகஸ்ட் 2021


அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் கொல்லங்கலட்டியில் வசிக்கும் வறிய குடும்பத்திற்கு குழாய்கிணறு மற்றும் மோட்டார் வசதிகள் ரூபா.109,735.00 செலவில் 09-08-2021 அன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவியை பிரான்சில் வசிக்கும் திரு. கிறிஸ்ரிஅருள் (ஊறணி பவுண்டேசன்) அவர்கள் வழங்கியுள்ளார். அவர்களுக்கு எமது நன்றிகள்.

அருட்தந்தை மரியசேவியர், பெரும்மதிப்பிற்குரிய ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை - நினைவுடன் நன்றிகள்
ஏப்ரல் 2021


மே மாதம் 18ம் திகதி 2009 அன்று முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் கடைசிக்கு முதல் நாள் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தன்னுயிர் ஈந்த அருட்தந்தை சறத்ஜீவன் அடிகளிடமிருந்து அவரது குடும்பத்துக்கு குறுஞ்செய்தி கிடைத்தது. ”நானும் ஸ ரீ பனும் ஒகே” என்று. அன்று மாலை 4.00 மணியளவில். அப்போது அவர்களுக்கு புரிந்தது அருட்தந்தை சறத்ஜீவனும் ஏனைய குருக்களும் அவர்களோடு இருந்த பிள்ளைகளும் இன்னமும் வெளியேறவில்லை என்று. உடனடியாக அருட்தந்தை மரியசேவியர் அடிகளாரிடம் தொடர்புகொண்டு இந்த தகவலை தெரிவித்தனர். அவர் உடனே மன்னார் ஆயருடன் தொடர்பு கொண்டார். மே மாதம் 18ம் திகதி 2009 அன்று குருக்களும் பிள்ளைகளும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு மறைந்த பெரும்மதிப்பிற்குரிய ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகையும் மறைந்த அருட்கலாநிதி மரியசேவியர்அடிகளாரும் காரணமாக இருந்தார்கள் என்பதை நன்றியோடு அந்த குடும்பம் நினைவுகூருகிறது. அவர்களின் ஆன்மா நித்திய மோட்சத்தில் இளைப்பாறுவதாக.

கிறிஸ்மஸ் பண்டிகைக்கால உதவிகள்
மார்கழி 2020


அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் கிறிஸ்மஸ் பண்டிகைக்ககாலத்தில் வறிய குடும்பங்களைச் சேர்தவர்களிற்கு நிதியத்தின் இயக்குனர் அருட்தந்தை கி.ஜோ. ஜெயக்குமார் அவகளால் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

பூனகரியில் வசிக்கும் 25 குடும்பங்களிற்கும், கோணாவில், திருநகர், கிளிநொச்சியில் வசிக்கும் 35 குடும்பங்களிற்கும் ரூபா.180,000.00 பெறுமதியான உணவுப்பொருள் பொதிகள் வழங்கப்பட்டன. மேலும் அருட்தந்தை நேசராஜா அடிகளார் ஊடாக ரூபா.25,000.00 பெறுமதியான உணவுப்பொருள் பொதிகளும் “அன்பகம்” ஊடாக ரூபா.25,000.00 உணவுப்பொருள் பொதிகள் பெண்தலைமைத்துவ குடும்பங்களிற்கும் வழங்கப்பட்டன. இதற்கான நிதிஉதவிகளை கனடா தமிழ் கத்தோலிக்க புதுவாழ்வு செபக்குழுவினர், எரிக், கத்தரின், தீபன், மரியா மற்றும் ரெனர் (கனடா) வழங்கினர். அவர்களுக்கு எமது நன்றிகள்.

மாற்றுத்திறனாளியான சிறுமிக்கு உதவி
புதுக்குடியிருப்பு, நொவம்பர் 2020

புதுக்குடியிருப்பில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவருக்கு அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதிஉதவியாக ரூபா.40,000.00 நொவம்பர் மாதம் 2020 ல் வழங்கப்பட்டது. இந்த நிதிப்பங்களிப்பை செய்த Dr.ரட்ணகுமாரி புஷ்பராஜா (லண்டன்) அவர்களுக்கு எமது நன்றிகள்.

எங்கள் மாணவி பல்கலைக்கழகத்துக்கு தெரிவு
ஜெயந்திநகர், கிளிநொச்சி, தை 2021

அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் உதவியை பெற்ற மாணவி 2020ல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 2013ம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் 2019ம் ஆண்டு வரை ஜெயந்திநகர், கிளிநொச்சியை சேர்ந்த மாணவிக்கு மாதாந்தம் கல்வி உதவிதொகை வழங்கப்பட்டது. இவர் அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் உதவியை பெற்ற முதலாவது தொகுதி மாணவியாவார். 2019ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரத்தில் கணிதபாடப்பிரிவில் 2சி 1 எஸ் பெறுபேற்றை பெற்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பௌதீகவிஞ்ஞானம் கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். அருட்தந்தை சறத்ஜீவன் நிதியம் அவரை வாழ்த்திநிற்கின்றது.

மாற்றுவலுவுள்ளவருகாகன தண்ணீர்தாங்கி வசதிகள்
பளை, மார்கழி 2020


அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் பளையில் வசிக்கும் மாற்றுவலுவுள்ளவரின் குடும்பத்திற்கு நிதியத்தின் இயக்குனர் அருட்தந்தை கி.ஜோ. ஜெயக்குமார் அவர்களால் தண்ணீர் தாங்கி மற்றும் நீர்க்குழாய் இணைப்பு வசதிகள் ரூபா 27,200 பெறுமதியில் மார்கழி 2020ல் செய்து கொடுககப்பட்டன. இதற்கான நிதிஉதவியினை வழங்கிய திரு/திருமதி கோபி சாந்தி (கனடா) அவர்களுக்கு எமது நன்றிகள்.

அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் தண்ணீர் தாங்கிகள் அன்பளிப்பு
பூனகரி, செப்டம்பர் 2020


பூனகரியில் உள்ள ஜந்து வறிய குடும்பங்களுக்கு அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் இயக்குனர் அருட்பணி கி.ஜோ.ஜெயக்குமார் அடிகளார் அவர்களால் ரூபா.29,000 பெறுமதியான 5 தண்ணீர் தாங்கிகள் ஆகஸ்ட் மாதம் அன்பளிப்பு செய்யப்பட்டது. கனடாவில் வசிக்கும் திரு. நியூட்டன் என்பவரால் அவரது பெற்றோரின் 60ஆவது திருமணநாள் நினைவாக இவை அன்பளிப்பு செய்யப்பட்டன. அவருக்கு எமது நன்றிகள்.

மீன்பிடி வலைகள் அன்பளிப்பு
பள்ளிக்குடா, ஜூன் 2020


அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் பள்ளிக்குடாவை சேர்ந்த மீனவர்கள் 15 பேருக்கு மீன்பிடி வலைகள் அன்பளிப்புசெய்யப்பட்டன. கொவிட் 19 எனப்படும் கொரோனா நோய்பரவலை தடுப்பதற்கான ஊரடங்கு காலப்பகுதியில் இம்மீனவர்கள் தொழில் இன்றி பாதிக்கப்பட்டிருந்தனர். ரூபா. 106,200 பெறுமதியான மீன்பிடிவலைகள் 25-06-2020 அன்று இவர்களுக்கு வழங்கப்பட்டன. பூனகரி பங்குத்தந்தையும் அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் இயக்குனருமான அருட்தந்தை கி.ஜோ. ஜெயக்குமார் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய Dr. A.M. செபஸ்ரியாம்பிள்ளை (கொழும்பு) மற்றும் கிறிஸ்ரி அருள் (பிரான்ஸ்) ஆகியோர் இதற்கான நிதியை அனுப்பியிருந்தனர். அவர்களுக்கு அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

ஊறணி பவுண்டேசன் நிதியுதவி - உலர் உணவுப்பொதிகள்
பூனகரி, ஏப்ரல் 2020


திரு. கிறிஸ்ரி அருள் அவர்களின் ஊறணி பவுண்டேசன் நிதியுதவியின் ஊடாக பூனகரி பிரதேசத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 100 குடும்பங்களிற்கான உலர் உணவுப்பொதிகள் ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டன. இவை கொவிட்19 கொரொனா வைரஸ் பரவலின் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தின் காரணமாக வேலைவாய்ப்பின்றி வருமானம் இன்றி தவித்த குடும்பங்களுக்கு அருட்தந்தை கி. ஜோ. ஜெயக்குமார் பங்குத்தந்தை, பூனகரி மற்றும் அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் இயக்குனர் அவர்களினால் வழங்கப்பட்டன. ரூபா. 121,795.00 பெறுமதியிலான உலர் உணவுப்பொருட்கள் 100 குடும்பங்களிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இவ் உதவியை தாராள மனத்துடன் வழங்கிய திரு. கிறிஸ்ரி அருள் அவர்களின் ஊறணி பவுண்டேசன் நிறுவனத்திற்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

பாடசாலை கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு
மாரீசன்கூடல், பங்குனி 2022


அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் மாரீசன்கூடல் றோ.க.த.க பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 10-03-2022 அன்று இயக்குனர் அருட்தந்தை கி.ஜோ. ஜெயக்குமார் அடிகளார் அவர்களால் 91 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான நிதிஉதவியாக ரூபா. 70.000. கனடாவில் உள்ள தமிழ் கத்தோலிக்க புது வாழ்வு நற்செய்தி செபக்குழுவினரால் வழங்கப்பட்டது. அவர்களுக்கு எமது நன்றிகள்.

ஒன்லைன் வகுப்புகளுக்காக ஸ்மாட்போன்கள்
இளவாலை, அக்டோபர் 2021


கொவிட் 19 நிலைமை காரணமாக பாடங்கள் ஒன்லைன் வகுப்புகள் மூலம் நடாத்தப்பட்டு வருகின்றன. அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் ஒவ்வொன்றும் ரூபா. 22,500.00 பெறுமதியான மூன்று ஸ்மாட்போன்கள் மூன்று மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி உதவிகளை கனடாவில் வசிக்கும் கிறிஸ்ரோபர் குடும்ப உறுப்பினர்களும், திரு. திருமதி ஜீவக்குமார் கருணா தம்பதியினரும். கிறிஸ்ரோபர் அவர்களின் பேரப்பிள்ளைகளும் வழங்கியுள்ளனர். அவர்களுக்கு எமது நன்றிகள்.

கொவிட் 19 தொற்றுகாலத்தின் உலர் உணவு பொருட்கள் உதவி
ஆகஸ்ட் 2021



அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் கொவிட்19 தொற்றுக்காலத்தில் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ரூபா.100,000.00 பெறுமதியான அரிசி. மா, சீனி, பருப்பு. பால்மா என்பன யாழ்ப்பாணம். சாட்டி, இளவாலை யில் வசிக்கும் 34 குடும்பங்களிற்கு வழங்கப்பட்டன. இதற்கான நிதியுதவியை பிரான்சில் வசிக்கும் திரு. கிறிஸ்ரிஅருள் (ஊறணி பவுண்டேசன்) அவர்கள் வழங்கியுள்ளார்.

மேலும். ரூபா.142.000.00 பெறுமதியான உலர்உணவுப்பொருட்கள் யாழ்ப்பாணம், இளவாலையில் வசிக்கும் வறிய குடும்பற்களிற்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியுதவியை கனடாவில் வசிக்கும் கிறிஸ்ரோபர் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். அவர்களுக்கு எமது நன்றிகள்.

மருத்துவ உதவிகள்
மார்கழி 2020



முழங்காவில். முட்கொம்பான், பளை, கல்லாறு, புன்னைநீராவி, உடையார்கட்டு மற்றும் வள்ளிபுனம் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் விசேட தேவையுள்ள பத்து பிள்ளைகளுக்கா ன சத்துணவு பொதிகள் அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் 10-12-2020ல் வழங்கப்பட்டன. இதற்காக ரூபா.29.830.00 செலவிடப்பட்டது.

முழங்காவில். பூனகரி, பளை, கல்லாறு, புன்னைநீராவி, உடையார்கட்டு மற்றும் வள்ளிபுனம் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் விசேட தேவையுள்ள பத்து பிள்ளைகளுக்கான பம்பஸ் ரூபா.19.978.00 பெறுமதியில் 10-12-2020ல் வழங்கப்பட்டது.

இரணைமாதா நகர், முகாவில் – பளை, தர்மபுரம் மற்றும் பிரமானதந்தனாறு ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் நான்கு விசேட தேவையுடையவர்களுக்கான 4 சக்கரநாற்காலிகள் மார்கழி மாதம் 2020 ல் வழங்கப்பட்டன. மேலும் இரணைமாதா நகர், பிரமானதந்தனாறு, உடையார்கட்டு மற்றும் வள்ளிபுனம் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் ஜந்து விசேட தேவையுடையவர்களுக்கான 5 விசேடநாற்காலிகள் மார்கழி மாதம் 2020 ல் வழங்கப்பட்டன. கல்லாறில் வசிக்கும் இருவருக்கு 2 விசேட ஊன்றுகோல்களும் வழங்கப்பட்டன. ரூபா.110,000.00 பெறுமதியிலான மருத்தவ உபகருணங்களை வழங்குவதற்கு நிதிஉதவி புரிந்த திருமதி ஊா்சுளா டன்ஸ்ரன் (கனடா), கனடா தமிழ் கத்தோலிக்க புதுவாழ்வு செபக்குழுவினர், மற்றும் Dr.ரட்ணகுமாரி புஷ்பராஜா (லண்டன்) அவர்களுக்கு எமது நன்றிகள்.

படிப்பதற்கான மேசை மற்றும் கதிரை அன்பளிப்பு
நாவாந்துறை, செப்டம்பர் 2020


நாவாந்துறையை சேர்ந்த வறியகுடும்பத்தை சேர்ந்த, க.பொ. த உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவனுக்கு படிப்பதற்கான மேசையும் கதிரையும் ரூபா. 6,000 பெறுமதியில் அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் ஆகஸ்ட் மாதம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கனடாவில் வசிக்கும் திரு. நியூட்டன் அவர்கள் இந்த உதவியை வழங்கியுள்ளார்கள். அவருக்கு எமது நன்றிகள்

அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் உலர் உணவுப்பொருட்கள் விநியோகம்
சுனாமிபுரம், பூனகரி, ஜூன், 2020

கொவிட் 19 எனப்படும் கொரோனா பாதிப்பினால் வேலைவாய்ப்பின்றி சுனாமிபுரம், பூனகரியில் உள்ள 75 வறியகுடும்பங்களுக்கு அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் உலர் உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதற்கான நிதிஉதவியாக ரூபா.75,000.00 கனடாவில் வசிக்கும் திருமதி கோபி சாந்தி அவர்களால் வழங்கப்பட்டது. அவர்களுக்கு எமது நன்றிகள்.

ஊறணி பவுண்டேசன் நிதியுதவி - கல்வி உதவி
மன்னார், இலுப்பைக்கடவை ஜனவரி, 2020

திரு. கிறிஸ்ரி அருள் அவர்களின் ஊறணி பவுண்டேசன் நிதியுதவியின் ஊடாக மன்னார், இலுப்பைக்கடவை தமிழ் மகாவித்தியாலயத்தை சேர்ந்த ஜந்து மாணவர்களுக்கான கல்வி உதவி அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் ஜனவரி 2020 ல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூபா.1000.00 மாதாந்தம் கல்வி ஊக்குவிப்பு நிதியாக வழங்கப்படுகிறது. இவ் உதவியை தாராள மனத்துடன் வழங்கிய திரு. கிறிஸ்ரி அருள் அவர்களின் ஊறணி பவுண்டேசன் நிறுவனத்திற்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ் உதவி திரு. லக்ஸ்டன், ஆசிரியர் மற்றும அதிபர்; இலுப்பைக்கடவை தமிழ் மகாவித்தியாலயம் அவர்களின் ஊடாக வழங்கப்படுகிறது. இம்மாணவர்கள் க.பொ.த உயர்தரம் பூர்த்தியாக்கும் வரையில் இவ்உதவி அவர்களுக்கு தொடர்ந்து அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு 97 மாணவர்கள் அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் மூலம் பயனடைந்து வருகிறார்கள்.

சறத்ஜீவன் நிதியத்தியத்தின் உதவிகள்
ஜனவரி 10, 2019

கொக்கிளாய் கிராமத்தை சேர்ந்த மாணவன் ஒருவருக்கு ரூபா. 18.000.00 பெறுமதியான துவிச்சக்கரவண்டி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. பிரான்சை சேர்ந்த கிறிஸ்ரி அருள் அவர்கள் தனது கிறிஸ்ரி ஊறணி டெவலெப்மன்ற் பவுண்டேசன் மூலமாக ரூபா. 50,000.00 வழங்கியுள்ளார். மேலும் கொக்கிளாய் கிராமத்தை சேர்ந்த 6 மாணவர்களுக்கு படிப்பதற்கான மேசைகளும் கதிரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

கண்தெரியாதோர் அமைப்பை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ரூபா. 50,000.00 பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் நத்தார் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்டது. இதற்கான நிதிஉதவியை அருட்தந்தை பிலேந்திரன் அடிகளாரும் திருமதி சாந்தி கோபி அவர்களும் வழங்கியுள்ளார்கள்.

சறத்ஜீவன் நிதியத்தினால் வசாவிளானை சேர்ந்த பெண் தலைமைத்துவமாக கொண்ட 6 அங்கத்தவர்கள் உள்ள குடும்பம் ஒன்றிற்கு ரூபா. 100,000.00 வழங்கப்பட்டுள்ளது. தமது வீட்டை கட்டி முடிப்பதற்கா இந்நிதிஉதவி வழங்கப்பட்டது. திரு. வடிவேல். (லண்டன்) அவர்கள் இதற்கான நிதி உதவியை வழங்கியுள்ளார்.

2013 முதல் அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் உதவிகள்
21 டிசம்பர் 2018


அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் 2013ம் ஆண்டு தொடக்கம் போரால் பாதிக்கப்பட்டஇ வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு பலவகையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அருட்தந்தை சறத்ஜீவன் நிதியம் 2013ம் ஆண்டு. முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் கடைசிநாளான 18ம் திகதி மே மாதம் உணவின்மையால் ஏற்பட்ட மாரடைப்பால் மரணித்த அருட்தந்தை சறத்ஜீவன் அடிகளார் நினைவாக தொடங்கப்பட்டது.

தற்போது. 89 மாணவர்களுக்கான கல்வி உதவியாக மாதந்தம் ஒவ்வொருவருக்கும் ரூபா.1000.00 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக தரம் 5ல் கற்கும் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் க.பொ.த உயர்தரம் பூர்த்தியாக்கும் வரை இந்த மாதாந்த உதவி வழங்கப்படுகிறது. உருத்திரபுரம். பூனகரி. மல்லாவி. இரணைப்பாலை. முல்லைத்தீவு. யாழ்ப்பாணம். உரும்பிராய். மற்றும் நாரந்தனை ஆகிய இடங்களை சேர்ந்த 89 மாணவர்கள் தற்போது பயனடைகிறார்கள். 2018ம் ஆண்டு ரூபா.894.400.00 கல்விக்காக மட்டும் செலவிடப்பட்டுள்ளது.

மேலும் வாழ்வாதார உதவிகள், மருத்துவ உதவிகள், மாற்று வலுவுள்ளோருக்கான விசேடமாக வடிவமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள். மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள். மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகள், வறிய பிள்ளைகளுக்கான உடைகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இரணைப்பாலை பற்றிமா பாடசாலைக்கு ஆங்கிலமொழி கற்கை கூடத்திற்கான கணினி மற்றும் இலத்திரனியல் உபகரணங்களும் வழங்கபட்டுள்ளது.

கி.ஜோ.ஜெயக்குமார் அடிகளாரும். பொருளாளராக அருட்தந்தை செ. யூட் அமலதாஸ் அடிகளாரும.; செயலாளராக செல்வி நித்திலா மரியாம்பிள்ளையும். இயக்குனர் சபை உறுப்பினர்களாக அருட்தந்தை ஜெரிபல் கிருபாகரன் அடிகளாரும். செல்வி நிக்கொலின் சாமிநாதர் அவர்களும் கொண்ட நிர்வாக சபையினால் அருட்தந்தை சறத்ஜீவன் நிதியம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

இந் நிதியத்திற்கான நிதி உதவிகளை உள்நாட்டிலும் புலம் பெயர் தேசங்களிலுமுள்ள நண்பர்கள். உறவினர்கள் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு
3 அக்டோபர் 2018

துவிச்சக்கரவண்டிகள் அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் மூன்று மாணவிகளுக்கு ஒவ்வொன்றும் ரூபா.14,800 பெறுமதியான துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. இதனை அச்சுவேலியை சேர்ந்த அருட்தந்தை ஜெபன் (ரூபா 14,800) அவர்களும் லண்டனை சேர்ந்த திரு. வடிவேல் (ரூபா 29,600) அவர்களும் வழங்கியுள்ளனர். அவர்களுக்கு எமது நன்றிகள்.

மாணவர்களுக்கான மாதாந்த கல்வி உதவி
14 ஓகஸ்ட் 2018

மாணவர்களுக்கான மாதாந்த கல்வி உதவி அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் 79 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. 2018 செப்ரெம்பர் மாதத்திலிருந்து மல்லாவி (முல்லைத்தீவு மாவட்டம்) கிராமத்தை சேர்ந்த 11 மாணவர்களுக்கான கல்வி உதவி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இம் மாணவர் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் ரூபா 1000 கல்விக்கான உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கான நன்கொடையை லண்டனில் வசிக்கும் திரு. கணேஸ்குமார் அவர்களும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த திருமதி தங்கமலர் அவர்களும் வழங்குகின்றனர். ஏனைய 68 மாணவர்களுக்கான நிதி உதவியை Dr. இராஜேந்திரா. Dr. ஜெய்மான் இம்மானுவல், Dr. இரட்ணகுமாரி, திரு. சஞ்ஜீவ லொக்குகே. திரு. வடிவேல் திரு. திருமதி மாறி லோகன். அருட்தந்தை நேசராஜா. நித்திலா மரியாம்பிள்ளை. திரு. ஜஸ்ரின் தங்கராஜா ஆகியோர் வழங்குகின்றனர். ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் மாதாந்தம் ரூபா. 1000 கல்விக்கான உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. உருத்திரபுரம். முல்லைத்தீவு. பூனகரி இரணைப்பாலை. யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் வசிக்கு எமது நன்றிகள்.

வறிய மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்கள்
30 ஜனவரி 2018

யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த வறிய மாணவர்கள் 43 பேருக்கு அப்பியாசப் புத்தகங்கள் 12-01-2018 அன்று அருட்தந்தை கி.ஜோ. ஜெயக்குமார் அடிகளாரால் வழங்கப்பட்டது. இதற்கான ரூபா.43.000.00 நிதிஉதவியை Dr. ரட்ணகுமாரி புஸ்பராஜா குடும்பத்தினாரால் வழங்கப்பட்டது.

30 வறிய மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்கள் 30-12-2017 அன்று வழங்கப்பட்டது. இதற்கான நிதிஉதவி ரூபா.37.500.00 Dr. ரட்ணகுமாரி புஸ்பராஜா அவர்களால் வழங்கப்பட்டது.

அனைத்து மாணவர்களும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட செயலகத்தில் வைத்து இவ் உதவிகள் வழங்கப்பட்டன.

புங்குடுதீவிலுள்ள சறத்ஜீவன் தரிசனம் முன்பள்ளி சிறுவர்களின் கிறிஸ்மஸ் ஒளிவிழா 5-12-2018
புங்குடுதீவு 5-டிசம்பர்-2018


புங்குடுதீவிலுள்ள சறத்ஜீவன் தரிசனம் முன்பள்ளி சிறுவர்களின் கிறிஸ்மஸ் ஒளிவிழா 5-12-2018 அன்று சிறப்பாக நடைபெற்றது. அருட்தந்தை செ. செபஜீவன். பங்குத்தந்தை புனித சவேரியார் ஆலயம். புங்குடு தீவு அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்தார். இம் முன்பள்ளி சண்பீம் பவுண்டேசன் நிறுவனத்தினால் அமைத்துக்கொடுக்கப்பட்டது. பயிற்சிகள் மற்றும் முன்பள்ளிக்கான செலவுகள் அனைத்தும் சண்பீம் பவுண்டேசன் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

அருட்தந்தை சரத்ஜீவன் ஒன்பதாவது ஆண்டு நினைவு தினம்
உருத்திரபுரம் 18-05-2018


மே மாதம் 18 ம் திகதி 2018 அன்று உருத்திரபுரத்தில் உள்ள பற்றிமா மாதா ஆலயத்தில் அருட்த்ததை சரத்ஜீவன் அவர்களின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன. பதினோரு மணிக்கு திருப்பலி ஒப்புகொடுக்க பட்டு அருட்தந்தையின் நினைவு சிலைக்கு மலர் வளையம் வைக்கப்பட்டு மெழுகுதிரிகள் ஒளியேற்றி நினைவு தின நிகழ்வுகள் இடம் பெற்றன.

வாழ்வாதார உதவிகள்
30 ஜனவரி 2018

அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் உடையார்கட்டை சேர்ந்த இரண்டு குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவியாக ரூபா.50,000.00 10-01-2018 அன்று வழங்கப்பட்டது. இந்த உதவியை திரு.வடிவேல் (லண்டன்), திருமதி.சுகந்தி குடும்பத்தினர் (கனடா) ஆகியோர் வழங்கியுள்ளனர்.

சிறுவர் நன்நடத்தை பாடசாலைக்கான உதவிகள்
30 ஜனவரி 2018


சிறுவர் நன்நடத்தை பாடசாலையை சேர்ந்த 83 மாணவர்களுக்கான துவாய்களும் நத்தார் ஓளிவிழாவிற்கான சிற்றுண்டிகளும் 20-12-2017 அன்று அருட்தந்தை கி.ஜோ. ஜெயக்குமார் அடிகளாரால் வழங்கப்பட்டது. இதற்கான நிதிஉதவி ரூபா. 63,000.00 திரு. கிறிஸ்ரோபர் குடும்பத்தினரால் வழங்கப்பட்டது.

அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் உதவிகள்
2 செப்டம்பர் 2019



மல்லிகைத்தீவு, புதுக்குடியிருப்பை சேர்ந்த துசாந்தினியின் குடும்பத்தினருக்கு சறத்ஜீவன் நிதியத்தினால் ரூபா.136,785 பெறுமதியில் வீடு பூர்த்தியாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கான கதவுகள், யன்னல்கள், பூச்சு வேலைகள், மற்றும் தரை வேலைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி உதவிகளை கிறிஸ்ரிஅருள். பிரான்ஸ் மற்றும் பத்திரிசியார் கல்லுரி பழையமாணவர்கள் 1987 A/L Batch ஆகியோர் வழங்கியுள்ளனர். அவர்களுக்கு எமது நன்றிகள். அச்சுவேலியைச் சேர்ந்த அநோஜி என்பவருக்கு ரூபா.100,000 பெறுமதியில் வீடு அமைப்பதற்கான காணிகொள்வனவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலியைச் சேர்ந்த மரியநாயகி என்பவருக்கு மலகூடம் அமைப்பதற்காக ஆடி மாதம் ரூபா.100,000 கொடுக்கப்பட்டுள்ளது. பண்டதரிப்பை சேர்ந்த விக்ரர் டோமினிக் என்பவருக்கு மருத்துவ செலவுக்காக ரூபா.40,000 ஆனி மாதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி உதவிகளை லண்டனில் வசிக்கும் வடிவேல் அவர்கள் வழங்கியுள்ளார். அவரிற்கு எமது நன்றிகள்.

புத்துாரை சேர்ந்த ஜஸ்மின் கில்டா என்பவருக்கு சிறுவியாபாரம் செய்வதற்காக ரூபா.25,000 ஆடி மாதம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி உதவியை கனடாவில் வசிக்கும் கிறிஸ்ரோபர் குடும்பத்தினர் வழங்கியுள்ளார். அவர்களிற்கு எமது நன்றிகள்.

செல்வி வசந்தி என்பவருக்கு ரூபா.17. 210 பெறுமதியான துவிச்சக்கர வண்டி ஏப்பிரல் மாதம் அன்பளிப்பு செய்யப்பட்டது. இதற்கான நிதி உதவியை அரவிந்ததன் அவர்கள் வழங்கியுள்ளார். அவர்களிற்கு எமது நன்றிகள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்பதற்கான வசதிகளை வழங்குதல்
2 பெப்ருவரி 2019



கிளிநொச்சி. முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான மேசை, கதிரை என்பனவும் புத்தகப்பை என்பனவும் அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ளது. 35 மாணவர்களுக்கு மேசை, கதிரை என்பனவும், 50 மாணவர்களுக்கு புத்தகப்பைகளும் ரூபா. 270.000.00 செலவில் வழங்கப்பட்டுள்ளது. கொக்கிளாய், உருத்திரபுரம், கிளிநொச்சி, முரசுமோட்டை, மல்லாவி, மாயவனூா் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தமாணவர்களுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன.

அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் இயக்குனர் அருட்தந்தை கி. ஜோ. ஜெயக்குமார் அடிகளார் உருத்திரபுரம் மாணவர்களுக்கான தளபாடங்களை 25-01-2019 அன்று வழங்கிவைத்தார். இதற்கான நிதியுதவிகளை திரு. கிறிஸ்ரி மரியாம்பிள்ளை, பிரான்ஸ், செல்வி மஞ்சுளா நீக்கிலாப்பிள்ளை, நியுசிலாந்து. சஞ்ஜீவ லொக்குகே, கொழும்பு மற்றும் மொன்றியலை சேர்ந்த நண்பர் ஆகியோர் வழங்கியுள்ளனர்.

மேலும் 95 மாணவர்களுக்கான மாதாந்த கல்வி உதவியாக ரூபா.1000 ஒவ்வொரு மாணவருக்கும் மாதாந்தம் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள், யுத்தத்தினால் பாதிக்கப்ட்டவர்களுக்கான வாழ்வாதார உதவிகள், மற்றும் மருத்துவ உதவிகளும் அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் வழங்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.


அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் ஏழுவருடங்கள் நிறைவு

வன்னி மாவட்டத்தில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது உருத்திரபுரத்திலிருந்து முள்ளிவாய்க்கால்வரை இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்காலில் மக்களுக்காக 18-09-2009 அன்று தன்னுயிர் ஈந்த அருட்தந்தை ம.த. சறத்ஜீவன் நினைவாக ‘அருட்தந்தை சறத்ஜீவன் நிதித்திட்டம்’ 23-02-2013ம் திகதி அவரது குடும்ப அங்கத்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

10-06-2014ம் திகதி முன்னாள் ஆயர் மதிப்பிற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை மற்றும் யாழ் ஆயர் மதிப்பிற்குரிய ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் அனுமதியுடன் ‘அருட்தந்தை சறத்ஜீவன் நிதித்திட்டம்’ உத்தியோகபூர்வமாக இயங்கத்தொடங்கியது. இயக்குனர், பொருளாளர், செயலாளர் மற்றும் இரண்டு அங்கத்தவர்கள் கொண்ட ஐந்து பேர் உள்ள நிர்வாக அமைப்பால் இந் நிதியம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. அருட்தந்தை கி. ஜோ. ஜெயக்குமார். இயக்குனர், செல்வி நித்திலா மரியாம்பிள்ளை செயலாளர், அருட்தந்தை யூட் அமலதாஸ், பொருளாளர், அருட்தந்தை த. ஜெ. கிருபாகரன், செல்வி நிக்கொலின் சாமிநாதர் நிர்வாகசபை உறுப்பினர்கள் ஆவார்கள். இலங்கையிலும் புலம்பெயர்ந்து உள்ள நாடுகளிலும் வாழும் நல்ல உள்ளம் படைத்தவர்களின் உதவியுடன் ‘அருட்தந்தை சறத்ஜீவன் நிதித்திட்டம்’ வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு மற்றும் மக்களுக்கு உதவிவருகின்றது.

தற்போது மாதாந்தம் 109 மாணவர்கள் அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் மூலமாக மாதாந்த உதவியாக குறைந்தது ரூபா.1000.00 பெற்று தமது கல்வியை தொடர்ந்து வருகிறார்கள். உதவிபெறும் மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதே அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் விருப்பமாகும்.

அருட்தந்தை சறத்ஜீவன் நிதித்திட்டத்திற்கு உதவிவழங்கும் அனைவரிற்கும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவும் அருட்தந்தையர்களுக்கும் நிர்வாகசபை அங்கத்தவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கின்றோம்

சுயதொழிலுக்கான உதவி
கிளிநொச்சி: 9 செப்டம்பர் 2016


திருக்குடும்ப கன்னியர்களின் வழிநடத்துதலுடன் கிளிநொச்சியில் உள்ள செல்வபுரத்தில் நடாத்தப்படும் பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கான சுயதொழிலுக்கான உதவி அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் செப்டம்பர் 9, 2015 அன்று கொடுக்கப்பட்டது. இதற்கான நிதி உதவியை புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் திரு. வடிவேல் அவர்களும் திரு.புஷ்பராஜா அவர்களும் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள்.

Amathi Karangal

அருட்தந்தை சரத்ஜீவன் நினைவாக
ஜீவசாட்சி புத்தக வெளியீடு

ஜூன் மாதம் இருபத்தி ஆறாம் நாள் திங்கட்கிழமை (June 26, 2017) பிற்பகல் 3:00 மணிக்கு யாழ் பிரதான வீதியில் உள்ள கலைத்தூதூ கலையகத்தில் 'ஜீவசாட்சி' என்ற புத்தகம் அருட்தந்தை சரத்ஜீவன் நினைவாக வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு அனைவரும் வந்து பங்கேற்று விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பாடசாலை மாணவர்கள் சித்திரங்கள் வரைவதற்கான உதவி
திருநெல்வேலி, தை 2022


அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் இயக்குனர் அருட்திரு கி. ஜோ. ஜெயக்குமார் அடிகளார் அவர்களால். திருநெல்வேலி றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலை மாணவர்கள் 57 பேருக்கு சித்திரங்கள் வரைவதற்கான உபகரணங்கள் 03-01-2022 அன்று வழங்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் திரு. செந்தில்குமரன். அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் செயலர் நித்திலா மரியாம்பிள்ளை மற்றும் ஆசிரியர்கள் பங்குபற்றினர். இதற்கான நிதிஉதவிகளை நியுசிலாந்தை சேர்ந்த திரு. திருமதி அஞ்சுளா சுகுமார் அவர்கள் வழங்கியுள்ளார்கள், அவர்களுக்கு எமது நன்றிகள்.

பாடசாலை புனரமைப்பு உதவி
தை 2022


அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் . திருநெல்வேலி றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையின் புனரமைப்பு வேலைகளுக்காக நிதிஉதவி 2021ம் வருடம் வழங்கப்பட்டது. இப்பாடசாலை 1901ம் வருடம் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகள் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. தரம் 1 தொடக்கம் 5 வரையான 57 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி பயிலுகின்றார்கள். இதற்கான நிதிஉதவிகளை மொன்றியல், கனடாவை சேர்ந்த நல்லுள்ளம் கொண்ட நண்பர் வழங்கியுள்ளார்கள், அவர்களுக்கு எமது நன்றிகள்.

சக்கர நாற்காலி அன்பளிப்பு
01 ஏப்ரல் 2021


அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் நெடுந்தீவில் வசிக்கும் மாற்றுவலுவுடைய 15 வயது சிறுவன் ஒருவருக்கு சக்கர நாற்காலி அன்பளிப்பு செய்யப்பட்டது. சிறுவனின் தந்தை சக்கர நாற்காலியை 26-03-2021 அன்று மறைந்த அருட்தந்தை சறத்ஜீவன் அடிகளாரின் வீட்டில் அதனை பொறுப்பேற்றார். இதற்கான நிதிஉதவி ரூபா.23,000.00 வை கனடாவில் வசிக்கும் திரு. நிமலகுமார் பாமினி தம்பதிகள் வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள்.

அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு
கொழும்புத்துறை: ஜூன் 2020


கொழும்புத்துறையை சேர்ந்த ரவீந்திரன் மேரிசுபதா என்பவருக்கு அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் ரூபா 18,850.00 பெறுமதியிலான துவிச்சக்கரவண்டி 19-06-2020 அன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. இதற்கான நிதிஉதவியை மொன்றியலை சேர்ந்த நன்கொடையாளர் வழங்கியிருந்தார். அவரிற்கு அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தையல்இயந்திரம் அன்பளிப்பு
உருத்திரபுரம்: 4 டேசெம்பேர் 2017



செம்மன்குன்றில் வசிக்கும் திருமதி மேரி ரஞ்சினி அவர்களுக்கு ரூபா 26,900 பெறுமதியான தையல்இயந்திரம் 10-10-2017 அன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது, இதனை லண்டனில் வசிக்கும் திரு.வடிவேல் அவர்கள் வழங்கியுள்ளார்.

அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் ரூபா 29.000 பெறுமதியான தையல் இயந்திரமும் அதற்கான மோட்டாரும் உருத்திரபுரத்தில் உள்ள திருக்குடும்ப கன்னியர் சிறுவர் இல்லத்திற்கு 10-07-2017 அன்று அன்பளிப்பாக அருட்சகோதரி செல்வராணி அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதிஉதவியை அருட்தந்தை சறாவின் சகோதரி செல்வி நித்திலா மரியாம்பிள்ளை அவர்கள் வழங்கியுள்ளார்.

மருத்துவ உதவி
மாவிட்டபுரம்: 4 டேசெம்பேர் 2017


மாவிட்டபுரம், நல்லிணக்கபுரத்தை சேர்ந்த திரு றொபின்சன் அவர்களின் பிள்ளைக்கான மருத்துவ உதவியாக ரூபா.55,000 ஆவணி 2017 ல் வழங்கப்பட்டது. இந்த உதவியை லண்டனில் வசிக்கும் திரு.வடிவேல் அவர்கள் வழங்கியுள்ளார்.

விசேடதேவையுடையவர்களுக்கான மலகூட வசதி
இளவாலை: 4 டேசெம்பேர் 2017


சிறுவிளான் இளவாலையை சேர்ந்த திரு. அருளானந்தம் என்பவருக்கு ரூபா.75,000 பெறுமதியான மலகூடமும், அக்கராயனை சேர்ந்த திரு. கிறேசியன் என்பவருக்கு ரூபா.44,00 பெறுமதியான கொமட் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உதவியை லண்டனில் வசிக்கும் திரு.வடிவேல் அவர்கள் வழங்கியுள்ளார்.

அமைதியின் அரசி ஆலயதிருவிழா
உருத்திரபுரம்: 22 ஆகஸ்ட் 2017


உருத்திரபுரம் செல்வா நகரில் அமைந்துள்ள அமைதியின் அரசி ஆலயதிருவிழாவும் மறைந்த முன்னாள் பங்குத்தந்தை சறத்ஜீவன் அடிகளாரின் உருவச்சிலை திறப்பு நிகழ்வும் 22-08-2017 நடைபெற்றது. இவ் ஆலயம் அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களால் 6-08-2008 இடம்பெயர்வின் முன்னர் உருவாக்கப்பட்டு அமைதியின் அரசி என தேவதாயருக்கு அர்ப்பணிக்கப்பட்டது

குறைகளை கூறி ஒதுங்கிவிடாது அர்ப்பணவாழ்வை நிறைவுடன் பல நெருக்கீடுகளை எதிர்கொண்டு வாழ்ந்தவர் அருட்பணி சறத்ஜீவன்.

- அருட்பணி சறத்ஜீவன் நினைவுமலர் “ஜீவசாட்சி”; வெளியீட்டில் யாழ் ஆயர்.


“தனது அர்ப்பண வாழ்வுக்கு நான் தகுதியுடையவனா என தன்னை மீளாய்வு செய்து கொண்டதுடன், குறைகளை கூறி ஒதுங்கிவிடாது நிறைவுடன் பணிசெய்வதை எந்த நெருக்கீடான தருணத்திலும் இறைநம்பிக்கை தளராது வாழ்ந்தவராக அருட்தந்தை சறத்ஜீவன் அடிகாளாரின் வாழ்வு முன்னுதாரணமானது” என சறத்ஜீவன் அடிகளாரின் நினைவுகளை பதிவாக்கிய “ஜீவசாட்சி” நூல் வெளியீட்டில் யாழ் ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை சிறப்புரை ஆற்றுகையில் குறிப்பிட்டார். அருட்பணி கி. ஜோ. ஜெயக்குமார் அடிகளார் தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் ஆயர் தொடர்ந்து உரையாற்றுகையில் புனிதராக பயணத்தை திருச்சபை அங்கீகரித்துக் கொள்வதற்கு முன் மக்களின் பணிவாழ்வால் மக்கள் ஏற்றுக்கொண்டவர்கள் மனங்களில் புனிதராக அங்கீகரிக்கப்படுவது அவர்கள் மறைவின்பின் உணரப்படுகின்றது. அருட்பணியாளர்கள், உருத்திரபுரம் பங்குமக்கள், நல்லுள்ளங்களால் மண்டபம் நிறைந்த நூல் வெளியீட்டின் உரையை சென் ஜேம்ஸ் பங்குத்தந்தை அருட்பணி ம.வி.இ. இரவிச்சந்திரன் அவர்களும் அனுபவப்பகிர்வினை அருட்பணி பாலதாஸ் பிராயன் அடிகளாரும் நன்றி உரையினை செல்வி நித்திலா மரியாம்பிள்ளை அவர்களும் வழங்க அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் வெளியிடப்பட்ட முதல்பிரதியை தலைவர் கி. ஜோ. ஜெயக்குமாரிடம் இருந்து யாழ் ஆயர்; அவர்கள் பெற்றுக்கொண்டார்.

தொலைக்காட்சி பெட்டி. சிடி பிளேயர் அன்பளிப்பு
முழங்காவில் 23-06-2017


அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் முழங்காவில் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் மாலை நேர கல்விகற்கும் மாணவர்களின் கல்விக்காக தொலைக்காட்சி பெட்டி ஒன்றும் சிடி பிளேயர் ஒன்றும் அன்பளிப்பாக 23-06-2017 அன்று அருட்தந்தை கி. ஜோ. ஜெயக்குமார் அவர்களால் வழங்கப்பட்டது. இதற்கான நிதிஉதவி ரூபா. 35,000வை லண்டனில் வசிக்கும் திரு. வடிவேல் அவர்கள் வழங்கியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.

தண்ணீர் போத்தல்கள் அன்பளிப்பு
4 டேசெம்பேர் 2017

Water bottles

பூனகரி பிரதேசத்திலுள்ள பள்ளிக்குடா வித்தியாலயத்தில் கல்விபயிலும் மாணவர்களுக்கான 60 தண்ணீர் போத்தல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன. கொழும்பில் வசிக்கும் சஞ்சீவ லொக்குகே என்பவரால் இவை சேகரிக்கப்பட்டன. இவற்றை கொடுத்து உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

மாணவர்களுக்கான மாதாந்த கல்வி
யாழ்ப்பாணம்: 19 ஒக்ரோபர் 2018


2018 ஒக்ரோபர் மாதத்திலிருந்து மாணவர்களுக்கான மாதாந்த கல்வி உதவி அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் 89 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. நாரந்தனையை சேர்ந்த 10 மாணவர்களுக்கு ஒக்ரோபர் மாதத்திலிருந்து ரூபா 1000 கல்விக்கான உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கான நன்கொடையை லண்டனில் வசிக்கும் திரு. திருமதி யஸ்ரின் அஞ்சனா அவர்கள் வழங்கமுன்வந்துள்ளார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள். எமது இணையத்தள முகவரி http://fathersara.info/

. ‘இளையோர் நாம் - கிறிஸ்துவின் ஒளியில் மாறிடுவோம் மாற்றத்தை நோக்கி’ - குழு பாடல் போட்டி
யாழ்ப்பாணம்: 9 செப்டம்பர் 2017


டிச.9 யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் அமரர் அருட்பணி சரத்ஜீவன் ஞாபகார்த்த கிறிஸ்து பிறப்பு குழு பாடல் போட்டி இன்று காலை மறைகல்வி நிலையத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றிய இயக்குனர் அருட்பணி அன்ரன் ஸ்டீபன் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இப்போட்டியில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்குகளிலிருந்து 13 இளையோர் ஒன்றிய குழுக்கள் மிகவும் இப்போடியில் ஆர்வத்துடன் பங்குபற்றி நிகழ்வினை சிறப்பித்தார்கள். அமரர் அருட்பணி சரத்ஜீவன் அடிகளாரின் சகோதரி நித்திலா மரியாம்பிள்ளை ஒளியேற்ற மறைகல்வி நிலைய இயக்குனர் அருட்பணி பெனட் அடிகளார் அசீர் வழங்கி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள். ‘இளையோர் நாம் - கிறிஸ்துவின் ஒளியில் மாறிடுவோம் மாற்றத்தை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் புத்தாக்க பாடல்களாக அனைத்தும் அமைந்திருந்தன. இப்போட்டியில் முதலாம் இடத்தை வசாவிளான் புனித யாகப்பர் ஆலய இளையோரும், இரண்டாம் இடத்தை முழங்காவில் செபமாலை மாதா ஆலய இளையோரும், மூன்றாம் இடத்தை மல்வம் திருக்குடும்ப ஆலய இளையோரும் பெற்றுக்கொண்டார்கள். இவர்களுக்கான பரிசில்களை யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் வழங்கினார். இப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து இளையோர் ஒன்றியத்தினருக்கும் நினைவு பரிசில்கள் வழங்கப்பட்டன

அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் கல்வி உதவி
யாழ்ப்பாணம்: 9 செப்டம்பர் 2016

புனித சார்ள்ஸ் மகாவித்தியாலயத்தில் கல்விபயிலும் போரினால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு மாதாந்தம் Rs.1000 ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப நிகழ்வு 19-09-2016 அன்று பாடசாலை அதிபர் திருமதி கிறிஸ்ரபெல் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் இயக்குனர் அருட்தந்தை கி.ஜோ.ஜெயக்குமார் அவர்கள் மாணவர்களுக்கான உதவிதொகையை வழங்கினார். அவர் தமது உரையில் மாணவர்கள் ஊக்கமுடன் கல்விகற்க வேண்டும் என வலியுறுத்தினார். உதவிபெறும் மாணவர்களும் அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் செயலாளர் செல்வி நித்திலா மரியாம்பிள்ளை, ஆசிரியர் கமில்டன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர். இதற்கான நிதி உதவிகளை லண்டனில் வசிக்கும் திரு. வடிவேல் அவர்கள் வழங்கியுள்ளார். அவரிற்கு எமது நன்றிகள்.

மேலும், வன்னியில் உள்ள 23 மாணவர்களுக்கும், யாழ்.உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்தை சேர்ந்த 14 மாணவர்களுக்கும் மாதாந்தம் Rs.1000 கல்விக்கான உதவியாக வழங்கப்படுகின்றது. மொத்தமாக 52 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றது. இதற்கான நிதிஉதவிகளை இலங்கையிலும் வெளிநாட்டிலும் வாழும் தமிழ்மக்கள் கொடுத்து உதவுகிறார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து பல நல்ல உள்ளம் படைத்தவர்களினால் மேலும் நிதிஉதவி கிடைக்கப்பெற்றதன் காரணமாக இருபத்தி மூன்று மாணவர்களுக்கு மாதாந்தம் கல்விக்கான நிதி வழங்கப்பட்டுவருகின்றது. வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட போரினால் பாதிக்கப்பட்ட அதேநேரம் கல்வியில் ஊக்கமுள்ள மாணவர்களுக்கு இவ் உதவிகள் வழங்கப்படுகின்றது. உருத்திரபுரம், இரணைப்பாலை, குமுளமுனை மற்றும் முல்லைத்தீவு பங்குகளை சேர்ந்த 23 மாணவர்கள் பயனடைகின்றார்கள். மேலும் யுத்ததின்போது காயமடைந்து மாற்றுத்திறனாளிகளாக உள்ளவர்களுக்கும் உதவிகள் வழங்கப்படுகின்றது.

மாற்றுவலுவுள்ளவருக்கு மலகூடவசதிகள்
கிளிநொச்சி: 9 செப்டம்பர் 2016


அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் வன்னி யுத்ததினால் பாதிக்கப்பட்ட மாற்றுவலுவுள்ள ஆறு பேர்களுக்கு அவர்களின் பாவனைக்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்ட மலகூடவசதிகள் எற்படுத்தி கொடுப்பதற்கான நிதிஉதவிகள் அமதிக்கரங்கள் இயக்குனர் அருட்தந்தை அன்புராச அமதி அவர்களிடம், அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தின் இயக்குனர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களினால் செப்டம்பர் 9, 2015 அன்று வழங்கப்பட்டது. மேலும் மாற்றுவலுவுள்ள நான்கு பேர்களுக்கு சுயதொழில் ஆரம்பிப்பதற்கான நிதியுதவியும் கொடுக்கப்பட்டது.

மனிதத்தைப் புனிதப்படுத்துவோம்
வவுனியா: 19 நவம்பர் 2016


வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்தவ கருத்தாடல் நிகழ்வு 19.11.2016அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் `மனிதத்தைப் புனிதப்படுத்துவோம்` என்ற தொனிப்பொருளில் உரையாற்ற நமக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. (Fr. Anpurasa)

அரங்கம் 2 ல் அருட்தந்தை சறத்ஜைீவன் அடிகளாரின் உருவப்படம் கொண்டுவரப்பட்ட அரங்கநிகழ்வுகள் நடைபெற்றன. அருட்தந்தை சறத்ஜைீவன் பற்றிய வாழ்க்கை சுருக்கமும் வழங்கப்பட்டது. அவரது உருவப்படம் தேசிய கல்வியற் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளது.

முள்ளந்தண்டு பாதிப்புற்றவருக்கு உதவி
வவுனியா: 04 ஜனவரி 2017


வவுனியா குமாங்குளத்தில் அமைந்துள்ள ‘சேவ் அக்ற் கோம்’(Save Act Home) என்ற இல்லத்தில் வாழும் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்ற சகோதரர்களுக்கான மருத்துவப் பொருட்களும்; இதே இல்லத்திலும் ‘அமதிக்கரங்கள்’ நிறுவனத்திலும் (Lebara Wellness Centre) தந்தையரை இழந்தவர்களினதும் இயலாமையுடன் கூடிய நபர்களினதுமான சுமார் 50 பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்களும் ‘பாதர் சறத் ஜீவன் பவுண்டேசன்’இன்(Fr.Sarathjeevan Foundation) அனுசரணையில் வழங்கப்பட்டன. அத்துடன் படுக்கையில் இருக்கும் 6 முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்ற சகோதரர்களுக்கான ஏயார் மற்றஸ் (Air Matress) என்பனவும் வழங்பப்படவுள்ளது. இதற்கான ரூபா. 225,000 நிதிபங்களிப்பினை திரு. ஞானப்பிரகாசம் அவர்களும் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் கிறிஸ்தோப்பர் குடும்பத்தினரும் கனடா வாழ் கத்தோலிக்க கரஸ்மெற்றிக் உறுப்பினர்களும் வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள். மேலும் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்ற 25 சகோதர்கள் “சேவ் அக்ற்” இல்லத்திற்கு வரஇருந்தாலும் நிதிபற்றாக்குறை காரணமாக அவர்களை இணைத்துக்கொள்ள முடியாதிருப்பதாக அதன் பொறுப்பாளர் ஜெகதீசன்தெரிவித்தார். (தகவல் நித்திலா)

சரத்ஜீவன் தரிசனம் முன்பள்ளி திறப்புவிழா
புங்குடுதீவு: 11 பெப்ருவரி 2017


புங்குடுதீவில் புனித சவேரியார் ஆலயத்தில் அமைந்துள்ள சறத்ஜீவன் தரிசனம் முன்பள்ளி 11.02.2017 அன்று மேன்மை தங்கிய ஆயா் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவா்களினால் ஆசீா்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இதற்கான ஏழு மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி உதவியினை திரு. அஜித்ஜோண்பிள்ளை இயக்குனுராக உள்ள “சண் பீம் பவுண்டேசன்“ நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் சறத்ஜீவன் தரிசனம் முன்பள்ளி மாணவா்களுக்கான சத்துணவு. மற்றும் கல்விக்கான உதவிகளையும் இந்நிறுவனம் பொறுப்பெடுத்துள்ளது.

புங்குடுதீவில் அமைந்துள்ள சரத்ஜீவன் தரிசனம் முன்பள்ளிக்கான நிரத்தர கட்டிடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா 09-07-2016 அன்று கியுடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை இயுஜின் பிரான்சிஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது. கொழும்பு Brandix Company இயக்குனர் அஜித் ஜோண்பிள்ளை அவர்களின் “சண்பீம் பவுண்டெசன்“ நிறுவனத்தினால் நிரந்தர கட்டிடத்திற்கான நிதியுதவி வழங்கப்படுகின்றது. இறுதி யுத்தத்தில் மரணித்த அருட்தந்தை சரத்ஜீவன் நினைவாக 2010ம் ஆண்டு புங்குடு தீவில் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது, 28 முன்பள்ளி மாணவர்கள் கல்விகற்கின்றார்கள்.


Contact by post:

Fr. Sarathjeevan Foundation
P.O. Box 2,
Bishop's House,
Jaffna,
Sri Lanka